ATA eLearning Tool

2020-12-05T03:13:34-05:00

வணக்கம், அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், அ.த,க. முன்னர் அறிவிந்திருந்ததுபோல, ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் இணையவழியில் இணைந்து ஈடுபாட்டுடன் பயிற்றுவிக்கவும்-பயிலவும் ஏதுவாக மழலை மற்றும் நிலை ஒன்றிற்குரிய பாட மற்றும் பயிற்சிப் புத்தகங்களின் பாடங்கள் அனைத்தும் கீழ்க்காணும் இணையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையவழிக் கற்றல் - AmericanTamileLearning : http://ata-atel.org/  இணையப் பக்கத்தின் அடிப்பாகத்தில் இணையவழிk கல்வியில் இணைவதற்கான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்வழி பதிவிட்டு ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் பயன்பெறக் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறியீடு வழங்கப்பட உள்ளன. அதனையும் மேற்சொன்ன இணைய முகவரியையும் பள்ளிப்பொறுப்பாளர்களாகிய தாங்கள், தங்களது பள்ளி ஆசிரியர்-மாணாக்கரது பெற்றோருடன் பகிர்ந்து இணையவழி ஈடுபாட்டுக் கல்வியின் வாயிலாக மேலும் பயன்பெற கேட்டுக்கொள்ளவும். இம்மின்மடலைத் தொடர்ந்து தங்களது பள்ளிக்கான குறியீடு AmericanTamilAcademy@gmail.com என்னும் மின்முகவரியிலிருந்து தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்த கேள்விகள் ஏதுமிருப்பின் ata_elearning@americantamilacademy.org ​என்னும் மின்முகவரியில் தொடர்புகொள்ளவும். நன்றி, கரு.மாணிக்கவாசகம் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் www.AmericanTamilAcademy.org American Tamil Academy Non-Profit Organization under IRS code 501(c)(3) வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!! 

ATA eLearning Tool2020-12-05T03:13:34-05:00

ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 2021

2020-12-05T03:02:44-05:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த மாணாக்கர் போட்டிகள் குறித்த விவரங்கள்-மீண்டும் நினைவூட்டுவதற்காக: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் வயதுவரம்பிற்குட்பட்ட போட்டி ஒவ்வொன்றிற்கும் இருவர் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பள்ளிகளது வேண்டுகோளுக்கிணங்க பதிவுசெய்வதற்கான இறுதிநாள் டிசம்பர் 6-லிருந்து 13 ஞாயிற்றுக்கிழமைக்கு நீட்டிக்கப்படுள்ளது. எனவே,  இதுவரை விண்ணப்பிக்காது இருக்கும் பள்ளிகள்எதிர்வரும் டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமைக்குள்  பதிவுசெய்திட வேண்டுகிறோம். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்வழி விவரம் அறிந்து கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யவும். Click here to open the Registration form பள்ளிப் பொறுப்பாளர்கள் தத்தம் பள்ளியின் மாணாக்கர்களை அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாப் போட்டியில் [...]

ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 20212020-12-05T03:02:44-05:00

ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 2021

2020-11-17T01:33:57-05:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்: நல்லாசிரியர் விருது: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில்  பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது.   விவரங்கள் இதன் கீழ்.  Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது):   Eligibility:  Each school can nominate up to two (2) teachers for this award. The teacher should have been volunteered as a primary teacher continuously for the last 3 years (2017/19, 2018/19, 2019/20) Additional consideration/recommendations for the selection:  [...]

ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 20212020-11-17T01:33:57-05:00

Thirukkural Essay Competition for High School Students

2020-10-30T13:22:32-04:00

Tamil Sangam of Greater Washington, American Tamil Academy(ATA), and the Tamil Literary Study Circle of Greater Washington join together to conduct Thirukkural Essay Competition for High School Students in the United States of America. 1.Rules for the Competition This competition is limited to students in the USA studying in grades 9 through 12. Essays can be written either in English or in Tamil There is no limit to the number of essays, a contestant can submit Essays must be in Unicode font.  Essays should be minimum of 1000 words and should not exceed 1,500 words in length  Essays should be sent [...]

Thirukkural Essay Competition for High School Students2020-10-30T13:22:32-04:00

Textbook Feedback

2020-03-09T19:04:37-04:00

அன்புடை பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், அ.த.க.வின் புதிய நிர்வாகக் குழுவினரின் அன்பு கலந்த வணக்கங்கள்.  வெற்றிகரகமாக 2019-20 கல்வியாண்டு முடிகிற இத்தருணத்தில் 2020-21ம் ஆண்டுக்கான நூற்களை அச்சிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் எங்களது பாடநூல் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  அச்சுக்குச் செல்லும் முன் உங்களுடைய சென்ற ஆண்டின் அனுபவத்திலிருந்து நூற்களைப் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் அவற்றைப் புதிய நூற்களில் மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும்.  சென்ற ஆண்டில் மாணவர்களோடு தாங்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியபோது பாடங்கள் பற்றிய கண்ணோட்டங்களை மாணாக்கர்கள் வழி பெற்றிருப்பீர்கள்.  அக்கருத்துகளில் குறிப்பானவை என்று நீங்கள் எண்ணுபவற்றைப் பகிர்ந்துகொண்டால் நல்லது.  எந்த நூலில் எந்தப் பக்கத்தில் மாற்றம் தேவை எனக் குறிப்பாகப் பக்க எண்களோடு குறிப்பிட்டால் நலம்.  Word கோப்பில் உங்கள் கருத்துகளை அனுப்புவதாக இருந்தால் support@americantamilacademy.org என்னும் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.  உங்களுடைய கருத்துகளை கூடியவிரைவில் அனுப்பினால் உதவியாக இருக்கும்.  ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதிக்குள் நிச்சயமாக அனுப்ப முயற்சிக்கவும். அன்புடன், அ.த.கவின் [...]

Textbook Feedback2020-03-09T19:04:37-04:00

New emails for ATA

2020-03-09T18:51:47-04:00

அனைவருக்கும் வணக்கம், அ.த.க. வழக்கமாகப் பயன்படுத்திவந்த amtaac.org செயற்தளத்தை மிண்டும் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக,அதன்வாயிலாகத் பள்ளிகளைத் தொடர்புகொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால்,தற்பொழுது,அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்திற்கென புதிய செயற்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான தளப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. […]

New emails for ATA2020-03-09T18:51:47-04:00
Go to Top