அனைவருக்கும் வணக்கம்,
அ.த.க. வழக்கமாகப் பயன்படுத்திவந்த amtaac.org செயற்தளத்தை மிண்டும் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக,அதன்வாயிலாகத் பள்ளிகளைத் தொடர்புகொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால்,தற்பொழுது,அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்திற்கென புதிய செயற்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான தளப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் ’AmericanTamilAcademy.org’ எனும் புதிய செயற்தளம் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் அதிகாரப்பூர்வ செயற்தளமாக செயல்பட இருக்கிறது.
எனவே, எதிர்வரும் நாட்களில் அ.த.க.-வைத் தொடர்புகொள்ள கீழ்க்காணும் மின்ஞ்சல்களை மட்டுமே பயன்படுத்துமாறு பள்ளிப்பொறுப்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள இருக்கிறேன்.

தலைவரைத் தொடர்பு கொள்ள : President@AmericanTamilAcademy.org
அதக பொதுச் சேவைகளுக்காகத் தொடர்புகொள்ள (ASMS உட்பட) : Support@AmericanTamilAcademy.org
அதக வினாத்தாட்களுக்காகத் தொடர்புகொள்ள : Evaluations@AmericanTamilAcademy.org
நமக்குள் நமது செயலாளரைத் தொடர்புகொள்ள : Secretary@AmericanTamilAcademy.org
நமது பொருளாளரைத் தொடர்புகொள்ள : Treasurer@AmericanTamilAcademy.org

புதிதாக இக்கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியிருந்த அ.த.க. தொடக்க நிலை (நிலை முன்மழலை முதல் நிலை 3 வரை) பாடத்திட்டம் முதற்கொண்டு நிலை நான்கிற்கு மேற்பட்ட பாடத்திட்டம் வரையில் திருத்தங்கள்
செய்ய ஏதுவாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப்பொறுப்பாளர்களது பின்னூட்டங்கள் பெறுவது தொடர்பாகவும், மூன்றாம் பருவக் கேள்வித்தாட்கள் பெறுதல் குறித்தும் மேலதிக விவரங்கள் கூடிய விரைவில் பள்ளிகளைச் சென்றுசேர இருக்கின்றன என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
கருமாணிக்கவாசகம்