அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்! 

பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளது முதற்பருவ வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தங்கள் அனைவரையும் மீண்டும் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி

... மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention): டிசம்பர்த் திங்கள் 9 மற்றும் 10, 2023 சனி மற்றும் ஞாயிறு கிழமை 

..கவின் ஐந்தாம் ஆண்டுவிழாவினை சென்ற ஆண்டைப் போலவே மீண்டுமொரு மெய்நிகர் விழாவாக எதிர்வரும் டிசம்பர் 9-10  தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த ... திட்டமிட்டுள்ளது. அதனில் மாணக்கர்களது தமிழ்த்திறன் அறிதல், போட்டிகள், நெடுநாள் ஆசிரியர் விருது வழங்கல், ஆண்டுவிழா மலர் வெளியீடு மற்றும் கல்வியாளர்களதுகருத்துரைகள் என தமிழ்க்கல்வி சார்ந்த விடயங்கள் இடம் பெற இருக்கின்றன. இவ்விவரத்தினை தங்களது பள்ளிப் பெற்றோர்கள், மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் எனஅனைவருக்கும் தெரிவித்து   விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க ஊக்கம் அளித்திட வேண்டுகிறோம்

ஆண்டுவிழாவில் குறிப்பாக இடம்பெற இருப்பவை

1)மாணக்கர் மற்றும் ஆசிரியர் போட்டிகள் குறித்த விவரங்கள்: 

 போட்டிகள் குறித்த விவரங்கள் கோப்பில் இணைக்கப் பட்டுள்ளது.  போட்டிக்கான பதிவு தொடர்பான விவரங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

 2)நெடுநாள் ஆசிரியர் விருது: 

நெடுநாள் ஆசிரியர் விருது குறித்த விவரங்கள் கோப்பில்  இணைக்கப் பட்டுள்ளதுமேலதிக தகவலுக்கு teacher.awards@AmericanTamilAcademy.org  என்ற முகவரிக்குதொடர்பு கொள்ளலாம்

 3)ஆண்டு விழா மலர்: 

ஆண்டு விழா மலர் குறித்த விவரங்கள்   இணைக்கப் பட்ட கோப்பில் 

விவரமாக இடம்பெற்றுள்ளது. மேலதிக தகவலுக்கு ataemagazine@AmericanTamilAcademy.org என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

 ...வின்  ஐந்தாம் ஆண்டுவிழாவை மெய்நிகர் வாயிலாகக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

 நன்றி

தினகர் கருப்புசாமி  

தலைவர் 

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் 

www.americantamilacademy.org