வணக்கம்,
அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,
அ.த,க. முன்னர் அறிவிந்திருந்ததுபோல, ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் இணையவழியில் இணைந்து ஈடுபாட்டுடன் பயிற்றுவிக்கவும்-பயிலவும் ஏதுவாக மழலை மற்றும் நிலை ஒன்றிற்குரிய பாட மற்றும் பயிற்சிப் புத்தகங்களின் பாடங்கள் அனைத்தும் கீழ்க்காணும் இணையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையவழிக் கற்றல் – AmericanTamileLearning : http://ata-atel.org/ 
இணையப் பக்கத்தின் அடிப்பாகத்தில் இணையவழிk கல்வியில் இணைவதற்கான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்வழி பதிவிட்டு ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் பயன்பெறக் கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறியீடு வழங்கப்பட உள்ளன. அதனையும் மேற்சொன்ன இணைய முகவரியையும் பள்ளிப்பொறுப்பாளர்களாகிய தாங்கள், தங்களது பள்ளி ஆசிரியர்-மாணாக்கரது பெற்றோருடன் பகிர்ந்து இணையவழி ஈடுபாட்டுக் கல்வியின் வாயிலாக மேலும் பயன்பெற கேட்டுக்கொள்ளவும்.
இம்மின்மடலைத் தொடர்ந்து தங்களது பள்ளிக்கான குறியீடு AmericanTamilAcademy@gmail.com என்னும் மின்முகவரியிலிருந்து தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்த கேள்விகள் ஏதுமிருப்பின் ata_elearning@americantamilacademy.org ​என்னும் மின்முகவரியில் தொடர்புகொள்ளவும்.

நன்றி,

கரு.மாணிக்கவாசகம்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

www.AmericanTamilAcademy.org
American Tamil Academy
Non-Profit Organization under IRS code 501(c)(3)
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!!