அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,
நலம், நாடுவதும் அதுவே!
வணக்கம்,
சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த மாணாக்கர் போட்டிகள் குறித்த விவரங்கள்-மீண்டும் நினைவூட்டுவதற்காக:
நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பள்ளியும் வயதுவரம்பிற்குட்பட்ட போட்டி ஒவ்வொன்றிற்கும் இருவர் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பள்ளிகளது வேண்டுகோளுக்கிணங்க பதிவுசெய்வதற்கான இறுதிநாள் டிசம்பர் 6-லிருந்து 13 ஞாயிற்றுக்கிழமைக்கு நீட்டிக்கப்படுள்ளது. எனவே,  இதுவரை விண்ணப்பிக்காது இருக்கும் பள்ளிகள்எதிர்வரும் டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமைக்குள்  பதிவுசெய்திட வேண்டுகிறோம். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்வழி விவரம் அறிந்து கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யவும்.
பள்ளிப் பொறுப்பாளர்கள் தத்தம் பள்ளியின் மாணாக்கர்களை அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாப் போட்டியில் பங்கேற்று அவர்கள்தம் திறமைதனை வெளிக்கொணரும் வகையிலும் மேலும் வெற்றியாளர்களாக சிறப்புப் பரிசுகளைப் பெறவும் ஊக்கம் அளிக்க வேண்டுகிறோம்.
இது குறித்த மேலதிக விவரங்கட்கு convention2021@americantamilacademy.org மின்முகவரியில் தொடர்புகொள்ளவும்.

நன்றி,

கரு.மாணிக்கவாசகம்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

www.AmericanTamilAcademy.org
American Tamil Academy
Non-Profit Organization under IRS code 501(c)(3)
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!!