வெற்றியாளர்கள் அனைவருக்கும் அ.த.க.வின் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!

 

அனைவருக்கும் வணக்கம்,
அ.த.க.வின் ஆண்டுவிழாப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்துத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களுக்கும் அவர்களை ஊக்குவித்த பள்ளிப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அ.த.க.வின் சார்பின் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
போட்டியாளர்களின் திறன்களை எமது நடுவர்கள் தீர ஆய்ந்து அறிவிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்கள் பெறக்கூடிய இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளனர். அவர்களுக்கு தங்களின் சார்பிலும் அ.த.க.வின் சார்பிலும் மிக்க நன்றி.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் அ.த.க.வின் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!
போட்டிப்பிரிவுகளில் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி தவிர்த்து ஏனைய போட்டிகளில் முதல் ஐந்து இடங்கள் பெறக்கூடிய இறுதிப்போட்டியின் வெற்றியாளர்கள் எதிர்வரும் டிசம்பர் 11-12 தேதிகளில் நடைபெற இருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில் தங்களது திறனை மீண்டும் வெளிப்படுத்துதல் வேண்டும். அதனை இதே நடுவர்கள் மெய்நிகர் வழியாகக் கண்டு அதனிலிருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் வரிசையின்படி முதல் ஐந்து இடம் பெறுபவர்களை தேர்ந்தெடுத்துத் தர இருக்கிறார்கள். அவர்கள் அனவருக்கும் முன்னர் குறிப்பிட்டிருந்ததுபோல உரிய பணமுடிப்புப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட இருக்கின்றன.
கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வரிசையின்படியான முதல் ஐந்து இடம்பெற்றவர்களது பெயர்கள் விழாவன்று அறிவிக்கப்படும்.
எனவே ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்கள் பெறக்கூடிய இறுதிப்போட்டியின் வெற்றியாளர்கள் டிசம்பர் 11-12 தேதிகளில் மெய்நிகர் வாயிலாக நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக தமது திறனை வெளிக்கொணர்ந்து முதன்மை இடங்களைப் பெற வாழ்த்துகிறோம்.
போட்டியில் பங்கேற்று முதல் ஐந்து இடத்தைத் தவற விட்டவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். தற்பொழுது வெற்றியிடங்களைத் தவறவிட்டிருப்பினும் எதிர்காலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று மேலும் தமது திறன்களை வெளிக்கொணர்ந்து முதன்மை இடங்கள் பெற்று வெற்றியாளர்களாகத் திகழ வேண்டி  விரும்புகிறோம்.
போட்டிகளில் முதல் ஐந்து இடங்கள் பெறக்கூடிய இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களின் பெயர் மற்றும் பள்ளி உள்ளிட்ட விவரப் பட்டியல் இதன்கீழ் இடம்பெற்றுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இறுதிப் போட்டி மற்றும் மெய்நிகர் விழா விவரம் ஆகியன விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
குறிப்பு: பட்டியலில் இருக்கும் இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களில் வரிசைப்படியான முதல் ஐந்து இடங்களை விழாவன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியின் மூலம் நடுவர்கள் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். பட்டியலில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பின் அவர்களில் சிலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருப்பர்.
தமிழ்ப் பேராளர்கள், கல்வியாளர்கள், மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களது இறுதிப்போட்டிகள், ஆசிரியர் விருதுகள், விழா மலர் வெளியீடு என பல்வேறு நிகழ்வுகள் நமது அ.த.க.வின் மெய்நிகர் ஆண்டுவிழாவில் அரங்கேற இருக்கின்றன. அனைத்து நிகழ்வுகளையும் இணையவழியில் காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!!

மாணாக்கர் போட்டிகளில் முதல் ஐந்து இடங்கள் பெறக்கூடிய இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களது பட்டியல்:

Competition Category Name of the Contestant Tamil School Name
Maaruvedam Group-1 (Up to 6)
Kayal Karthikeyan Avvaiyar padasalai
Dheekshika Thirumurugan Sun Prairie Tamil Society
Mohith Balaji Sun Prairie Tamil Society
Nila Karthik Tampa Bay Tamil Academy
Ishan Sundar Arumbu Tamil Palli
Krithiga Meganath Pittsburgh Tamil Sangam Tamil School
Vinisha Visweswaran Austin Tamil School
Suttigalin Kuttik Kathai Group-1 (Up to 6)
Aashika Jaipravinkumar Sun Prairie Tamil Society
Saindhavi Ragavan Pittsburgh Tamil Sangam Tamil School
Hrudaya Kathi Bridgewater Tamil School
Vidyesh Vinodh Cerritos Tamil Sangam
Dheekshika Thirumurugan Sun Prairie Tamil Society
Vedhashri Senthilkumar JTM Tamil Palli
Kayal Elango Annai Tamil Academy
Seyyul Group-1 (7- 8)
Arna Sampath Bridgewater Tamil School
Abhinav  Karthikeyan Cerritos Tamil Sangam
Dhiya Abirami  Parthiban Bharathiyar Tamil School
Akshitha Vinodh Cerritos Tamil Sangam
Vidhaarth Praveen Coppell Tamil Learning Center
Vanshika Viswanathan CR Tamil Palli
Harsha Vadhani Kumara Sundaram San Antonio Tamil School
Seyyul Group-2 (9-10)
Nethra Kathi Bridgewater Tamil School
Achintya  Sathis Kannan Coppell Tamil Learning Center
Chandradithya Boobathi Coppell Tamil Learning Center
Adhvika Chandrasekhar Bridgewater Tamil School
Lakshita  Srimurugan Arasi Nagara Tamil Palli
Sashvanth Vetrivel Cerritos Tamil Sangam
Magizh Vadhani Kumara Sundaram San Antonio Tamil School
Abirami Kalyanasundaram Annai Tamil Academy
Drawing Group-1 (5-7)
Keerthy Dinesh Austin Tamil School
Pratyush Jaya Karthikeyan CR Tamil Palli
Aaruhi Ramachandiriya Pittsburgh Tamil Sangam Tamil School
Iniyaa Pathikumar Cerritos Tamil Sangam
Krishang Thiyagarajan Pittsburgh Tamil Sangam Tamil School
Drawing Group-2 (8-11)
KathiravanHariharan Shraddha JTM Tamil Palli
Sanjay Rajesh JTM Tamil Palli
Krithik Raja Coppell Tamil Learning Center
Nivinraj Rajamukesh Agaram Tamil Palli
Oviya Yuvaraj Pittsburgh Tamil Sangam Tamil School
Drawing Group-3 (12-14)
Sarveshwar Saravanakumar Coppell Tamil Learning Center
Yazhini Rajkumar Tampa Bay Tamil Academy
Lakshana Krishnakumar Coppell Tamil Learning Center
Virutsha Anandaprakash New York Tamil Academy (NYTA)
Hanshika Jaipravinkumar Sun Prairie Tamil Society
Medwin Leo Prince Gerald Aathichudi Arunthamizhp Palli

 

ஆசிரியர் போட்டிகளில் முதல் ஐந்து இடங்கள் பெறக்கூடிய இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களது பட்டியல்:

Competition Category Name of the Contestant Tamil School Name
Sirukathai Group-1
Vishvashanthi Saravanakumar Coppell Tamil Learning Center
Thirumurugan Balassoupramaniane Sun Prairie Tamil School
Surya Selvaraj Pittsburgh Tamil Sangam Tamil School
Revathi Vijayaraghavan Bridgewater Tamil School
Vidya Venkates Exton Tamil Palli
Kavithai Group-1
Uma Maheswari Angamuthupillai somasundaram Avvaiyar padasalai
Neelakandan Venkataraman Bharathi Tamil Academy (Redmond, Washington)
Madhumitha Prasanna Avvaiyar Padasalai
Piriya (பிரியா) Venugobalan (வேணுகோபாலன்) Ilankai Tamil Mantram New Jersey
Anitha Gunasekaran Plymouth Meeting Tamil School
Speech Group-1
Uma Mageswari Panneerselvam Coppell Tamil Learning Center
Maheswari Jagadeeshkumar Austin Tamil School
Varna Priyadarshini Kandanathan Rhode Island Tamil School
Sripriya Anandan Cerritos Tamil Sangam
Shareka Devaraj Cerritos Tamil Sangam