Student Competition Details – 2021 @ Virtual Convention
atadev2021-10-18T18:50:52-04:00Competition details updated. Student Competitions 2021 @ Virtual Convention
Competition details updated. Student Competitions 2021 @ Virtual Convention
அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention) விவரங்கள் - டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு 1) மாணக்கர் மற்றும் ஆசிரியர் போட்டிகள் 2)நெடுநாள் ஆசிரியர் விருது 3) ஆண்டுவிழா மலர் அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention): டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்ததுபோல அ.த.க-வின் மூன்றாம் ஆண்டுவிழாவினை சென்ற ஆண்டைப் போலவே மீண்டுமொரு மெய்நிகர் விழாவாக எதிர்வரும் டிசம்பர் 11-12 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது. அதனில் மாணக்கர்களது தமிழ்த்திறன் அறிதல், போட்டிகள், நெடுநாள் ஆசிரியர் விருது வழங்கல், ஆண்டுவிழா மலர் வெளியீடு மற்றும் கல்வியாளர்களது கருத்துரைகள் என தமிழ்க்கல்வி சார்ந்த விடயங்கள் இடம்பெறுவதுடன் புதியதாக ஆசிரியப் பெருமக்களுக்கான போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன. இவ்விவரத்தினை தங்களது பள்ளிப் [...]