School Communication

2020-02-27T03:13:05-05:00

School Communication பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம். உங்களில் பலர் விடுமுறையில் இருப்பீர்கள். சிலர் அடுத்த கல்வி ஆண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருப்பீர்கள். அதே நேரத்தில், அ.த. க வில், புத்தகப்பணிகள் ஓய்வில்லாமல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.  நாங்கள் முன்னரே அறிவித்தபடி நமது பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தி திருத்தி அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இதில் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது பல அமெரிக்க மற்றும் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழக தமிழ்ப்பேராசிரியர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பல தன்னார்வல ஆசிரியர்கள் என ஒரு மாபெரும் அணியே இணைந்து செயல்பட்டு வருகிறது. பணியாற்றும் அனைவரும், இரவு பகல் பாராது, வாரநாட்கள், வார இறுதி நாட்கள் என பாராது தம் பேருழைப்பை நல்கி புத்தகங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் இருந்து முன்மழலை என்றொரு தொடக்க நிலைக்கான பாட புத்தகம் வெளிவர இருக்கிறது என முன்னரே அறிவித்திருந்தோம். இப்புத்தகத்தில் பாடல்கள் மற்றும் படங்களே மிகுந்திருக்கும். நம் பிள்ளைகளை கவரும் வண்ணம் அமையும். மழலை [...]