அன்புடை பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும்,
அ.த.க.வின் புதிய நிர்வாகக் குழுவினரின் அன்பு கலந்த வணக்கங்கள்.  வெற்றிகரகமாக 2019-20 கல்வியாண்டு முடிகிற இத்தருணத்தில் 2020-21ம் ஆண்டுக்கான நூற்களை அச்சிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் எங்களது பாடநூல் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  அச்சுக்குச் செல்லும் முன் உங்களுடைய சென்ற ஆண்டின் அனுபவத்திலிருந்து நூற்களைப் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் அவற்றைப் புதிய நூற்களில் மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும்.  சென்ற ஆண்டில் மாணவர்களோடு தாங்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியபோது பாடங்கள் பற்றிய கண்ணோட்டங்களை மாணாக்கர்கள் வழி பெற்றிருப்பீர்கள்.  அக்கருத்துகளில் குறிப்பானவை என்று நீங்கள் எண்ணுபவற்றைப் பகிர்ந்துகொண்டால் நல்லது.  எந்த நூலில் எந்தப் பக்கத்தில் மாற்றம் தேவை எனக் குறிப்பாகப் பக்க எண்களோடு குறிப்பிட்டால் நலம்.  Word கோப்பில் உங்கள் கருத்துகளை அனுப்புவதாக இருந்தால் support@americantamilacademy.org என்னும் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.  உங்களுடைய கருத்துகளை கூடியவிரைவில் அனுப்பினால் உதவியாக இருக்கும்.  ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதிக்குள் நிச்சயமாக அனுப்ப முயற்சிக்கவும்.
அன்புடன்,
அ.த.கவின் பாடநூல் குழுவினர்